முடிவுக்கு வந்த சர்கார் பஞ்சாயத்து இப்படி ஒரு மாஸ் பஞ்ச் வசனமா கொண்டாட்டத்திற்கு ரெடியா நண்பர்களே ?

  • முடிவுக்கு வந்த சர்கார் பஞ்சாயத்து இப்படி ஒரு மாஸ் பஞ்ச் வசனமா? கொண்டாட்டத்திற்கு ரெடியா நண்பர்களே ?
  • தமிழ்சினிமா வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்.எப்படா தீபாவளி வரும் சர்கார் படம் பார்க்க வேண்டும் என எல்லோரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.இந்த நிலையில் சர்கார் படத்தின் கதை பஞ்சாயத்து ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது.வழக்கை விசாரித்த நீதிபதி சர்கார் படம் வெளியிட எந்த தடையும் இல்லை என தீர்ப்பளித்தார்.
    மேலும் சர்கார் கதைக்கு சொந்தம் கொண்டாடிய வருண் ராஜேந்திரன் பெயர் படத்தின் டைட்டில் கார்டில் போடுவதற்க்கு படக்குழு சம்மதித்துள்ளது.டைட்டில் கார்டில் எழுத்தாளர் வருண் ராஜேந்திரன் அவர்களுக்கு நன்றி என போடப்போகின்றனர்.அதுமட்டுமில்லாமல் வருணுக்கு 30 லட்சம் ரூபாய் தர சம்மதித்துள்ளனர்.


    இதைதொடர்ந்து சர்கார் தீபாவளி வெடியாக வெடிக்க தயாராயியுள்ளது.படத்தில் துப்பாக்கி படம் போலவே IM WAITING வசனமும் ஒரு முக்கியமான காட்சியில் விஜய் அவர்கள் பேசி உள்ளார்.அதைத்தவிர சர்காரில் வேறு சில அனல் பறக்கும் பஞ்ச் வசனமும் உள்ளது என தெரிவித்துள்ளார்கள்.

Comments