முருகதாஸ்ஸை கைது செய்ய போன போலீஸ் சர்கார் சர்ச்சை ?

முருகதாஸ் கைது செய்ய போன போலீஸ் சர்கார் சர்ச்சை ?
  • சர்கார் திரைப்படம் தீபாவளிக்கு வெளிவந்து சும்மா பட்டி தொட்டி எங்கும் பட்டைய கிளப்பி தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றி பெற்றுவிட்டது.சென்னயில் முதல் வசூலே 2.41 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளது.தற்போது படம் வெளிவந்து இரண்டே நாளில் 110 கோடி உலகளாவிய வசூல் செய்துள்ளது.

    இதற்க்கு மத்தியில் தற்போது அதிமுக படத்திற்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளது. திரையரங்குகளுக்கு சென்று போராட்டம் செய்தும் விஜயின் பேனர்களை கிழித்தும் வன்முறையில் ஈடுபட்டுள்ளது.இருந்தாலும் தளபதி விஜய் ரசிகர்கள் விஜய் வழியில் அமைதி காத்துவருகின்றனர்.இதனால் படத்திற்கு கூடுதல் விளம்பரமாக அமைந்து எல்லா மக்களும் சர்கார் திரைப்படத்தை பார்க்க ஆர்வமாகயுள்ளனர்.


    நேற்று இரவு போலீஸ் முருகதாஸ் வீட்டிற்க்கு கைது செய்வதற்காக சென்றுள்ளனர்.அப்போது முருகதாஸ் வீட்டில் இல்லை என்பதை அறிந்தவுடன் போலீஸ் திரும்பியுள்ளனர்.தற்போது முருகதாஸ் ட்விட்டர் தளத்தில் எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை நான் நல்லா இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Comments